×

உள்ளாட்சி அமைப்புகளில் 2 மாதங்களுக்கு தேவையான பாதுகாப்பு கவசங்களை இருப்பு வைக்க வேண்டும்: அமைச்சர் அறிவுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகையில் நடந்தது. இதில் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்கள் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஹர்மந்தர் சிங், சென்னை மண்டல கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு சிறப்பு கண்காணிப்பு குழு அலுவலர்கள் ராஜேந்திர குமார், அபாஷ் குமார், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், கூடுதல் ஆணையர் தினகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ெதாடர்ந்து, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அளித்த பேட்டி:  அனைத்து பணியாளர்களுக்கும் மார்ச் மாத ஊதியத்தை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும், ஊழியர்களுக்கான பாதுகாப்பு கவசங்கள், கிருமி நாசினிகள் இரண்டு மாத இருப்பு வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 3,955 மூன்று சக்கர வாகனங்கள், 14  மாநகராட்சிகள் மற்றும் 121 நகராட்சிகளில் 416 நடமாடும் காய்கறி அங்காடிகள், பேரூராட்சிகளில் 1189 நடமாடும் காய்கறி விற்பனை அங்காடிகள் மூலம் வீடுகளுக்கே சென்று விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அம்மா உணவகங்களில் மொத்தம் 102.88 லட்சம் இட்லிகளும், 39.13 லட்சம் கலவை சாதங்களும், 31.45 லட்சம்  சப்பாத்திகளும் வழங்கப்பட்டுள்ளன.

 சென்னை மாநகராட்சியில் உள்ள 407 அம்மா உணவகங்களுக்கு 19.54 கோடியும், பிற 14 மாநகராட்சிகள் மற்றும்  121 நகராட்சிகளில் உள்ள 247 அம்மா உணவகங்களுக்கு  11.85 கோடி என மொத்தம் 31.39 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தூய்மைப் பணிகளில் ஈடுபடும் அனைவரும் தவறாமல் பாதுகாப்பு கவசங்கள் அணிந்தே தூய்மை பணிகளில் ஈடுபட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

Tags : Minister , Corona, Local Authorities, Defense Shields, Minister
× RELATED மதத்தை தவிர பேசுவதற்கு பாஜகவினரிடம்...